ஒரு சிரேஷ்ட கடற்படை அதிகாரி சேவையிலிருந்து பிரியாவிடை
 

தலைமை பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் கடற்படை மற்றும் விமானப்படை பணிப்பாளர் ரியர் அட்மிரால் சரத் மொஹாட்டி இன்றுடன் (அக்டோபர் 14) தமது 34 வருட நீண்ட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன இன்று சந்தித்த வேளையில் அவருக்கு கடற்படை மரபுகளின் படி ஒரு மரியாதை அணிவகுப்பும் அளிக்கப்பட்டது.

சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும் சிரஷ்ட அதிகாரியை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர். 1981 ம் ஆண்டு, முதலாம் கடெட் அதிகாரிகள் உள்லெடுப்பில் கடற்படையில் இனைந்த இவர் தம் நீண்ட சேவையின் போது கடற்படையின் பல்வேறு கப்பல்களிலும் வேறு ஸ்தாபனங்களிலும் சேவையாற்றியுள்ளார். அவருடைய சேவை காலத்தின் போது கடற்படையின் நலனுக்காக தமது அனுபவத்தையும் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகள் மூலம் பெற்ற அறிவையும் அர்பணித்து சேவையாற்றினார். நாட்டிட்கும் குறிப்பாக கடற்படைக்கும் அவர ஆற்றிய சேவை கடற்படை சரித்திரத்தில் பதிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.