கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஹம்பேகமுவையில் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக ஹம்பெகமுவ, கொடவெஹெர மகா வித்தியாலயத்தில் மற்றும் ரதபலாகம ஸ்ரீ போதிராஜராமயில் இரன்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊவா மாகாண திட்ட பணிப்பாளர் திரு. ஜகத் புஷ்பகுமார அவர்களால் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது.

சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் இவ்வகையான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் தேவை அதிகமாக காணப்படுகிறது. இவ்வியந்திரங்களின் மூலம் 720 க்கு அதிகமான கொடவெஹெர மகா வித்தியாலயத்தில் மாணவர்களும் 380 க்கு அதிகமான குடும்பங்கள் மற்றும் ரதபலாகம பிரதேச 850 குடும்பங்களும் பயனடையும்.

கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி நாடளாவ ரீதியில் 39 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வியந்திரங்ளில் மூலம் 11,000 அதிகமான பாடசாலை மாணவர்களும், 20,000 அதிகமான குடும்பங்களும் பயனடையகிரது. இது போன்று மேலும் பல சமூக நல திட்டங்களை மேற்கொள்ள கடற்படை உத்தேசித்துள்ளது.

நிகழ்ச்சிக்காக வணக்கத்துக்குரிய மகா சங்க உறுப்பினர்கள், ஜனாதிபதி சிறுநீரக தடுப்பு செயலணியிள் மருத்துவ அதிகாரி குஷான் ஹெட்டியாரச்சி அவர்கள் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பல பிரதேசவாசிகளும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துக்கொண்டனர். இந்த பகுதிகளில் சிறுநீரக நோய் தடுக்க எடுக்க வேண்டிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது