சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளைபிராந்தியத்திட்குட்பட்ட புன்குடுதீவு, இலங்கை கடற்படை கப்பல் கோடைம்பரவின் வீரர்களால் சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 03மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களுடன் ஒரு ரோந்துப் படகு, 04 சுழியோடி முகமூடிகள்,03 சோடி சுழியோடி காலணிகள் உட்பட 04 கடலைட்டைகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு கடற்படை கட்டளை பானம, இலங்கை கடற்படை கப்பல் மஹானாகவின் வீரர்களால்,சாரலகாடி கடல் நீரேரிபிரதேசத்திளல் 2500 மீட்டர் நீளம் தனியிழை வலை கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்டதனியிழை வலை கல்முனை உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய் பிரிவுக்கு கிடைத்த தகவல்படி இச் சோதனையை மேற்கொன்டனர்.