சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட சிலாவதுர இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த தளத்திள் வீர்ர்களால் முன்நேற்று (20) மற்றும் நேற்று(21) சிலாவதுர பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் 10 ரோந்துப் படகுகள், 05 தனியிழை வலைகள், மற்றும் 03 ஜிபிஎஸ் கருவிகளும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபரும் பொருள்களும் மன்னார் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு கடற்படை கட்டளை சாம்பூர், இலங்கை கடற்படை கப்பல் பரகும்பாவின் வீரர்களால், நேற்று(21) கரகாடச்சேனை பிரதேசகடலில் 100 மீட்டர் நீளம் தனியிழை வலை கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட தனியிழை வலை முத்தூர் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.