சிரேஷ்ட அதிகாரிகளுக்கான விடுமுறை பங்களா கடற்படைத் தளபதியால் கெக்கரி குலம் பிரதேசத்தில் திறந்து வைப்பு
 

இலங்கை கடற்படை மூலம் கெக்கரி குலம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 2 அறைகள் கொண்ட நவீன வசதிகளுடைய சிரேஷ்ட அதிகாரிகளுக்கான விடுமுறை பங்களா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நகர முதல்வர் தொடம்பே கமகே அவருக்கு கடற்படைத் தளபதியால் நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்ஹ,மேட்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா, கடற்படை பணிப்பாளர் நாயகத்தில் அதிகாரிகள், மேட்கு கடற்படை கட்டளைக்கு சேற்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்துக்கொண்டனர். இப் விடுமுறை பங்களா நிர்மாணிக்க பங்களிப்பு வலங்கியவர்களுடன் கடற்படைத் தளபதி குழு புகைப்படத்துக்கு தோன்றினார்.