வங்காளம் கடலோர காவல்படையில் இரு கப்பல்களில் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த வங்காளம் கடலோர காவல்படையில் கப்பல்களான செய்ட் நச்ரூல் மற்றும் தாஜுடீன் கப்பல்களில் சிரேஷ்ட அதிகாரி பிரதி பணிப்பாளர் நாயகம் கொமடோர் யஹ்யா சயிட் உட்பட கப்பல்கலிள் கட்டளை அதிகாரிகளான கப்டன் முகமது சலிஹுடீன் மற்றும் கப்டன் முகமது ஹாசன் தாரிக் ஆகியோர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இலங்கை, வங்காளம் தூதரகம் பாதுகாப்பு ஆலோசகர், ஷாஹ் அஸ்லம் பர்வேச் அவரும் இச்சந்திப்பின் போது கலந்துக் கொண்டார்.