இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல இந்தியாவில் பயிற்சி விஜயம்
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல 2016 அக்டோபர் 24 திகதி இந்தியாவில் கொச்சி துறைமுகத்துக்கு சென்றடைந்தது. இப் பயணத்தின் போது கடலில் விழுந்த ஒருவர் மீண்டும் பாதுகாப்பாக கப்பலுக்கு எடுக்கும் பயிற்சி (Man Overboard),விபத்தான கப்பல் துறைமுகத்துக்கு எடுத்து செல்லும் பயிற்சி மற்றும் விபத்தான கப்பல் செயல்பட வேண்டிய வழிகல் அன்றான பயிற்சி அமர்வுகள் இரு கப்பல்களில் நடைபெற்றன.

இந்தியக் கடற்படையின் அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் இரு கப்பல்களில் விஜயம் செய்யும் போது கப்பல்களில் செயல்திறன் மற்றும் தொழில்நுட்பத்தை தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு இரு கப்பல்களில் அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் இந்தியக் கடற்படை கடல் வானிலை மற்றும் அறிவியல் பயிற்சி பாடசாலையில் (School of Naval Oceanology and Meteorology) கல்வி சுற்றுப்பயணம் சென்ரார்கள். இந்நிகழ்வை நினைவுகூருமுகமாக நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.