கடற்படை வீரர்களுக்கு சாதனை பதக்கங்களை வழங்கப்படும்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமயில் ஆயுத படைகளின் உறுப்பினர்களுக்கு சாதனை பதக்கங்களை வழங்கப்பட்டது.

தாய் நாட்டில் ஐக்கியம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்க தன்னுடைய உயிர் தியாகம் செய்த ஆயுத படைகளின் உறுப்பினர்களுக்கு 2 நிமிடங்கள் அமைதியின் பின் இன்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இன்நிகழ்ச்சில் ஆயுத படைகளின் உறுப்பினர்களுக்கு “பரம வீர விபூசனய”,”வீரவிக்ரம விபூசனய”, “ரனவிக்ரம பதக்கம” மற்றும் “ரனஷுர பதக்கம” வழங்கப்பட்டது. இன்நிகழ்ச்சில் இலங்கை கடற்படையில் மூவர் “ரனவிக்ரம பதக்கமும் 141வர் “ரனஷுர பதக்கமும்” வென்றார்கள்.

“பரம வீர விபூசனய” எதிரி முன்னால் தங்கள் உயிர்களை பணயம் வைத்து தமது தாய்நாடு பாதுகாகும் தனிநபர்களுக்கு வழங்கும். வாழ்க்கைல் மிக உயர்ந்த பதக்கம் இது ஆகும். “வீரவிக்ரம விபூசனய” எதிரி முன்னால் நடைபெறும் போரின்போது காட்டபடும் தைரியம், துணிவு முன்வந்து இப் பதக்கம் வழங்கப்படும். “ரனவிக்ரம பதக்கம” தனியாகவோ, மற்றவர்களுடன் கூட்டாக எதிரி முன் காட்டப்படும் துணிச்சலான செயலுக்கு இப் பதக்கம் வழங்கப்படும். “ரனஷுர பதக்கம” எதிரி முன்னிலையில் எடுக்கபடும் சிறந்த நடவடிக்கைகலுக்கு வழங்கப்படும்.

மேற்படி நிகழ்வுக்கு பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள், பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள், பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரான எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக அவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் உட்பட ஆயுத படைகளில் சிரேஷ்ட அதிகாரிகல், வீர்ர்கல் மற்றும் வீர்ர்கலுடைய குடும்ப உறுப்பினர்களும் இன் நிகழ்வில் கலந்துகொன்டன.