சிறு வேக படகு ‘செட்ரிக்’ கடற்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
 

சிறு வேக படகு ‘செட்ரிக்’ கடற்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு நேற்று (31) காலை, பாதுகாப்பு அமைச்சர் திரு ருவன் விஜேவர்தன அவரால் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, கிழக்கு கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா, மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உட்பட வீர்ர்கள் இன் நிகழ்வில் கலந்துகொன்டன.

கொமாண்டர் செட்ரிக் மார்ட்டென்ஸ்டைன் அவரை கௌரவப்படுத்தும் முகமாக இலங்கை கடற்படையினால் அதன் சிறு வேக படகுகள் ‘செட்ரிக்’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடற்படையின் சிறப்பு படகு பிரிவு (SBS), 1993ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தற்போது கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன மற்றும் கொமாண்டர் செட்ரிக் மார்ட்டென்ஸ்டைன் அவர்களால் நிறுவப்பட்டுள்ளது. வேகப் படகு மற்றும் அவுட்போர்டு இயந்திரங்கள் தொடர்பான நிபுணத்துவத்தை இப் படகுகளுக்கு இவர்கள் உபயோகித்துல்லார்கள்.