கடல்சார் பாதுகாப்புப் பணியிக்கு ஒரு வருடம். கடற்படை மூலம் அரசாங்கத்துக்கு ரூபா 233 கோடி வருமானம்

13 நவம்பர் 2015 திகதி கடல்சார் பாதுகாப்புப் பணி நடவடிக்கைகள் எவன்கார்ட் பாதுகாப்பு சேவையில் கடற்படை பொறுப்பேற்ற பின் ஒரு வருடத்திற்குள் ரூபா 233 கோடி வருமானம் அரசாங்கத்துக்கு சம்பாதிக்க கடற்படைக்கு முடிந்தது.

கடந்த வருடம் நவம்பர் 13 ஆம் திகதி கடல்சார் பாதுகாப்பை கடற்படயினர் பொறுப்பேற்றுக் கொன்டனர். ஒரு வருடத்தில் 6646 கப்பல் பயணங்களுக்கு பாதுகாப்பு வழங்கி 233 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் காலியில் அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டு அலுவலகங்களுக்கிடையில் 6646 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாதமொன்றுக்கு சராசரியாக 554 பயணங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஈட்டபட்ட வருமானத்தை அரசாங்கத்தின் ஒன்றிணைந்த நிதியத்துக்கு கையளிப்பதற்கான கடற்படையினர் மேற்கொள்வர். வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் எவன்ட் கார்ட் பாதுகாப்பு நிருவனம் அமைக்கப்பட்டிருந்தது. எனினும் குறிந்த நிறுவனத்துக்கும் கடற்படைக்குமிடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய வெளியிடப்பட்ட சிறப்பு ஆணை மூலம் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு கடற்படையினருக்கு ஒப்படைக்கபட்டது.

இப் கடமைகளை ஒப்புக்கொண்ட பிறகு கப்பல்களில் கடற்பகுதி பாதுகாப்பு கடமை,ஆயுதங்கள் மற்றும் வெடிபொருற்கள் வழங்குதல் கடற்படையின் முக்கியமான கடமையாகும். மேலும், உயர் ஆபத்து பகுதிகள் ஊடாக தொடர்ந்து செல்லும் வணிக கப்பல்களில் பாதுகாப்பு தேவைகள் காலி மற்றும் கொழும்பு பகுதி வழியாக மிகவும் திறமையாக கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் நடைமுறைக்கு எடுத்துள்ளது.

காலி மற்றும் கொழும்பு செயற்பாட்டு அலுவலகங்கல் மூலம் ஆயுதங்கள் பெறுதல், வைத்திருத்தல் பிற இணைந்த பாதுகாப்பு சேவைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அணிகள் வழங்கப்படும்.