பிஜி தீவு மாநில பாதுகாப்பு சேவைகள் துணைத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

பிஜி தீவு மாநில பாதுகாப்பு சேவைகள் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது அசீஸ் அவர்கள் இன்று(16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பின் போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கடற்படை இயக்குனர் ஜெனரல்களும் இச்சந்திப்பின் போது கலந்துக் கொண்டார்கள்.