இன்னும் இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய எண்ணக்கருத்திற்கிணங்க சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல அவருடய வழிமுறைகளின் கீழ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் மற்றும் கலென்பிதுனுவெவ கொகவெவ கிராமத்தில் இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலையத்தின் நிறுவலைசெய்யபட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஊட்டச்சத்து சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சர், கெளரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் கலந்து கொண்டார். மேலும், பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள், கடற்படைத் தளபதி, சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல அவர்கள், வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க அவர்கள், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னகோன் அவர்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் பல விஐபி நபர்கள்,அப் பகுதியில் உள்ள மக்களும் கலந்து கொண்டன.

இவ்வியந்திரங்கள் மூலமாக போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு மற்றும் கொகவெவ பிரதேசத்தில் 490 க்கு அதிகமான குடும்பங்களும் பயனடையும். வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதிவுடய நேரடி மேற்பார்வையின் கீழ் கடற்படை சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடய பங்களிப்புடன் இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுதக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன. இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதி சிறுநீரக நோய் தடுத்தல் செயலணியில் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்டுள்ளன. சிறுநீரக நோய் பரந்தளவில் காணப்படுகின்ற நாட்டின் பல பகுதிகளில் இதுவரை 54 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.