கடற்படையில் “கயக்” படகுகள் தரைப்படைக்கு கொடுக்கபடும்
 

இலங்கை கடற்படை கரையோர ரோந்து படகுகள் வடிவமைப்பு திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட “கயக்” வகையில் 08 கரையோர ரோந்து படகுகள் கடந்த 19 திகதி மாதுருஒய இலங்கை இராணுவ சிறப்புப் படை பயிற்சி நிருவனத்தில் இலங்கை தரைப்படைக்கு வழங்கபட்டது.

இந் நிகழ்வில் தலைமை விருந்தினராக பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்கள் கலந்து கொண்டார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள், இராணுவ சிறப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள், கடற்படை இயக்குனர் மற்றும் பயிற்சி, படகோட்டம் படகுகள் குளு தலைவர் கொமடோர் (டைவிங்) பிரியந்த பெரேரா அவர்கள் வுடன் தரைப்படை மற்றும் கடற்படையில் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இப் படகுகள் தரைப்படையில் இராணுவ பயிற்சிகளில் பயன்படுத்தப்படும் குறைந்த செலவில் மிகவும் மென்மையாக தயாரிக்கப்பட்ட இப் படகுகளை பாராட்டி பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்கள் தன்னுடைய திருப்தியை வழங்குனார். அங்கு இராணுவ சிறப்பு படை வீர்ர்களால் “கயக்” படகுகள் பயன்படுத்தி பயிற்சி நடத்தப்பட்டது. இப் சந்தர்ப்பத்தின்போது நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.