காலி கலந்துரையாடல் 2016க்கு பங்கு பெறும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

காலி கலந்துரையாடல் 2016 ஏழாவது சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெறும் வெளிநாட்டு கடற்படை பிரதிநிதிகள் மற்றும் கடல்சார் வெளிநாட்டு நிறுவனங்களில் சிரேஷ்ட பிரதிநிதிகள் இன்று (28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சந்தித்தனர்.

அங்கு, அவர்கள் நட்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மற்றும் மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தலுக்கு மிகவும் முக்கியமான புதிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை உலகம் முழுவதும் பரவி இருக்கும் கடல்சார் நிபுணர்கள் மற்றும் கடற்படை மூலோபாயம் இயற்றுபவர்கள் விவாதிக்க இந் கருத்தரங்கு சிறந்த வாய்ப்பை வழங்கியத்க்கு அவர்கள் கடற்படைத் தளபதிக்கு தமது நன்றியை வெளிப்படுத்தியவுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அட்மிரல் சுனில் லன்பா
இந்திய கடற்படை தளபதி
அட்மிரல் ஹாரி பி ஹாரிஸ்
அமெரிக்கத் பசிபிக் கட்டளைத் தளபதி
கொமடோர் வில் வெரென்டர்
ராயல் கடற்படை, ஒருங்கிணைந்த கடல்சார் படைகள்
வைஸ் அட்மிரல் அன்ரியஸ் கிரெளவ்ஸ்
ஜெர்மன் கடற்படை தளபதி
கர்னல் கியாவு சிவ் டான்
மியான்மார்
கர்னல் முகமது இப்ராகிம் மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படை
மற்றும் கடலோர காவல்படை