அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்கள் விடுதலை சம்பந்தமாக அரசு கடற்படையை பாராட்டுகிறது

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்தன அவர்கள் நேற்று முன் தினம் (15) அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கலை சந்தித்து அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை அவரிடம் கையளித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத் தொழிலாளர்கள் மூலம் அங்கு நிறுத்திருந்த கப்பல்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுருக்கும் போது வெற்றிகரமாக கப்பல்கள் மீட்பு நடவடிக்கை தொடர்பாக கடற்படை தளபதி மற்றும் கடற்படைக்கு அரசாங்கத்தின் புகழ்ச்சியை மற்றும் சிறப்பான நன்றியை வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூருனார்.

இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறியதாவது, இரண்டு கப்பல் நிறுவனங்களின் பிரதிநிதிளும் தன்னை அழைத்து ஆபத்தில் இருக்கும் அவர்களுடைய கப்பல்கள் பாதுகாத்து குடுங்க என்று கேட்டுகொன்டதாகவும் அதன் பிரகு அவர் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர்வுடன் விவாதித்து கப்பல்கள் மீட்பு நடவடிக்கைகலுக்கு கடற்படை அழைத்த்தாகவும் கூரினார். இந்த வழிமுறைகளைவுடன் செயல்படுத்திய கடற்படை துறைமுகத் தொழிலாளர்களுடய தடைகளை மத்தியில் வெற்றிகரமாக இரண்டு சர்வதேச கப்பல்களும் விடுதலை செய்தன.

சர்வதேச சட்டம் விதிகள் தொடர்பாக ஒரு நாட்டின் துறைமுகத்தில் இருக்கும் கப்பல்கள் பாதுகாக்கும் பொறுப்பு அந்த நாட்டு அரசுக்கு உள்ளன. அதன்படி, இந்த கடமைக்கு அதிகாரம் உள்ள கடற்படை மூலம் துறைமுகத்தில் ஏற்ப்பட்ட அவசரகால நிலைமை கட்டுப்படுத்தபட்டதாக மேலும் கூறினார். துறைமுகத்தில் முன் அமைக்கப்படும் தாவர மற்றும் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலை காரனமாக கடற்படை பங்களிப்பது மேலும் முக்கியம் என்று அவர் கூறினார்.