இன்னும் 06 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 06 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடந்த நாட்களில் அனுராதபுரம், வவுனியா மற்றும் சிலாபம் பகுதிகளின் திறந்து வைக்கப்பட்டது.

அனுராதபுரம் போலீஸ் நிலையம், சிலாபம் போலீஸ் நிலையம், வவுனியாவின் காபச்சி கிராமம், வவுனியாவின் மஹகச்சிகுடி பண்டைய குகைகள் ஆலயம்,பெரியஉலுக்குலம மாமடுவ ரஜமகா விஹாரய, அனுராதபுரம் ஸ்ரீ சாராநந்த மஹா பிரிவென ஆகும் இடங்கலில் இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறக்கப்பட்டது.

அனுராதபுரம் மற்றும் சிலாபம் போலீஸ் நிலையங்களின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு பொலிஸ் தலைமையகத்தில் நிதியுதவி வழங்கப்பட்டது. காபச்சி கிராமத்தில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துக்கு சிரச தொலைக்காட்சியிள் கம்மெத்த திட்டம் மூலம் வழங்கப்பட்டது. வவுனியாவின் மஹகச்சிகுடி பண்டைய குகைகள் ஆலயம்,பெரியஉலுக்குலம மாமடுவ ரஜமகா விஹாரய, அனுராதபுரம் ஸ்ரீ சாராநந்த மஹா பிரிவென ஆகும் இடங்கலில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு புத்த சாசன அமைச்சு நிதி பங்களிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடற்படை தளபதியுடய அறிவுறுத்தல்கள் படி 22 டிசம்பர் 2015 திகதி பூனாவ மற்றும் கடவத்ரபேவ ஆகும் கிராமங்கள் அடிப்படையில் தொடங்கிய சமூகம் திட்டம் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 50 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிலைநாட்டுவது கடற்படை தளபதிவுடய நோக்கமானது. எனினும் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் கடின உழைப்பு மற்றும் திறமை காரணமாக இது வரை 71 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் நிருவப்பட்டன.இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் 33.000 குடும்பங்கள் மற்றும் 25.000 மேற்பட்ட  மாணவர்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இது போன்ற சமூக சேவை திட்டங்கள் செய்பதக்கு கடற்படை பணியாற்றி வருகின்றது. மேலும், இந்த சமூக சேவை திட்டம் தீவின் ஏனைய முகவர் மற்றும் துறைகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக வருகிறது. கடற்படை மேற்கொள்ளப்படும் இப் திட்டம் மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் சிறுநீரக நோய் அகற்ற உதவியாக இருக்கும்.