இலங்கை கடற்படைக் கப்பல் கெமுனு நிருவனத்தின் புதிதாக கட்டப்பட்ட 08 மாடி அதிகாரி குடியிருப்பு திறக்கப்பட்டது

வெலிசறை கடற்படைக் கப்பல் கெமுனு நிருவனத்தின் புதிதாக கட்டப்பட்ட 08 மாடி அதிகாரி குடியிருப்பு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடய அழைப்பின் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கையால் நேற்று (20) திறக்கப்பட்டது.

அது கட்டுமான பணிகள் 2012 ஆகஸ்ட் 15 ஆம் திகதி துவங்கி கடற்படை சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடய உழைப்பால் கடற்படை செலவு பயன்படுத்தி இது கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டது. புதிய வசதிகளுடன் முழுமையான கட்டப்பட்ட இப் குடியிருப்பில் 195 அதிகாரிகளுக்கு இடமளிக்க வழங்கப்படும்.

இலங்கை கடற்படையில் பணியாளர்களின் தலைவர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள்,தன்னார்வ கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நீல்ரொசய்ரோ அவர்கள் மற்றும் மேற்குக் கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா அவர்கள் உட்பட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் இந் நிகழ்ச்சிக்காக கலந்து கொண்டனர்.