சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையால் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் நேற்று (26) சிலாவதுர கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் 02 படகு, 02 தனியிலை வலைகள்(Surukku) மற்றும் 02 சோடி சுழியோடி காலணிகள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.