இன்னும் 03 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதின் மற்றொரு திட்டமாக சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் பிரதேசங்களின் மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்திசெய்வதக்கு அப் பகுதிகளின் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படும். அதன் படி மகியங்கனை பெலிகல்லை கிராமத்தில்,கிராதுருகோட்டை ஸ்ரீ தர்மோதய மகா பிரிவென மற்றும் பொல்பிதிகம நிகவெகெர கிராமத்தில் நிருவப்பட்ட 03 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று (09) மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.

அதன் படி மகியங்கனை பெலிகல்லை கிராமத்தில் நிருவப்பட்ட 03 நீர் சுத்திகரிப்பு யந்திரம் மூலம் இப் பகுதியில் சுமார் 280 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும்.மேலும் கிராதுருகோட்டை ஸ்ரீ தர்மோதய மகா பிரிவெனத்தில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு யந்திரம் மூலம் அப் பிரிவெனத்தில் கல்வி கற்கும் 35 துறவிகள் உட்பட இப் பகுதியில் சுமார் 750 குடும்பங்களுக்கு மற்றும் பொல்பிதிகம நிகவெகெர கிராமத்தில் சுமார் 280 குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். இப் நீர் சுத்திகரிப்பு யந்திரங்கள் சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் நிதியுதவியுடன் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களுடய நேரடி மேற்பார்வையின் கீழ் கடற்படை சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடய பங்களிப்பின் இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுதக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன.

இந்த சமூக நலத் திட்டம் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு தன்னுடைய அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை சாதகமாக பயன்படுத்தி குறுகிய நேரத்துக்குள் குறைந்த செலவின் செய்யப்படும் இது வரை 96 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 45.130 குடும்பங்களுக்கு மற்றும் 40,350 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும். அது அபாயகரமான சிறுநீரக நோய் இலங்கையின் அகற்ற உதவாகும்