வடக்கு கடற்படை கட்டளை களசிறப்பு மருத்துவ சிகிச்சை
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக நெடுந்தீவு மக்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை கடந்த 12ஆம் திகதி நடைபெற்றது.

இதன்பிரகாரம்,குறித்த இவ் மருத்துவ முகாம் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களின் தலைமையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார சேவையின் இயக்குநர் ஆகியோர்இணைந்து குறித்த இம் மருத்துவ முகாமை நடைதினர்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நெடுந்தீவு மக்களின் மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் இங்கு வசிக்கினற 483 பேருக்கு இலவச சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டது. 24 மருத்துவர்கள் மற்றும் பல மருத்துவ நிபுணர்களும் இப் மருத்துவ சிகிச்சை நிகழ்வில் கலந்துகொன்டு குழந்தை நோய்கள், மகப்பேறு மற்றும் பிரசவ, தொண்டை, காது, மூக்கு நோய்கள், கண் மருத்துவம் பொது நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களஞக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

குறித்த இச் செயற்றிட்டத்தின் மூலம் பயன் பெற்ற நோயளிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் உட்பட யாழ்ப்பாண வைத்தியசாலை உறுப்பினர்கள்ஆகியோருக்குதமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.