மேலும் 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்களுக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டம் இன்று (16) முடிவு செய்யப்பட்டது. அதன் படி மன்னார் பிரதேசத்தில் உயிலந்குலம் பொலிஸ் நிலையத்தின் மற்றும் திரப்பனே அதுல்கம கிராமத்தில் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கபபட்டது.

உயிலந்குலம் பொலிஸ் நிலையத்தின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் வசிக்கின்ற 90 குடும்பங்கள் பயன் பெறவுள்ளதுடன் 35 போலீஸ் அதிகாரிகளும் சுத்தமான குடிநீர் வசதியின பெறவுள்ளனர். இதேவேளை திரப்பனே அதுல்கம கிராமத்தில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் வசிக்கின்ற 650 குடும்பங்கள் பயன் பெறவுள்ளது. இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி இந் நிலையங்கள் பல நிறுவப்பட்டு வருவதுடன் இதற்கான நிதி அனுசரணையை சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, நாடு பூராகவும் 102 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியதன் மூலம் சுமார் 46,810 குடுமபங்களும் மற்றும் 40,600 பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர். எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும் இந்த சமூக திட்டம் மூலமாக கொடிய சிறுநீரக நோய் இலங்கையின் அகற்ற மிக உதவியாக இருக்கிறது./p>