கடற்படை கடலோர காவல் படகுகள் தயாரிக்கும் திட்டத்துக்கு ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழ் வழங்கப்படும்.
 

இலங்கை கடற்படை கடலோர காவல் படகுகள் தயாரிக்கும் திட்டம் கடற்படை வரலாற்றில் இன்னொரு மைல்கல்லை குறிக்து இலங்கை தரநிர்ணய நிருவனம் மூலம் வழங்கப்படும் ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழ் வெற்றி பெற்றது.

அதன் படி இன்று(24) இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தின் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சான்றிதழ் விழாவின் பிரதம அதிதியாகக் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கலந்துகொன்டுள்ளார்.

இந் நிகழ்வில் உரையாற்றிய கடற்படை பணிப்பாளர் நாயகம் பொறியியல், ரியர் அட்மிரல் ரோஹித்த பேமசிரி அவர்கள் வெலிசர இலங்கை கடற்படை கப்பல் மஹசேன் நிருவனத்தின் 2000 ஆன்டில் தொடங்கப்பட்ட இந்த படகுகள் தயாரிக்கும் திட்டம் இது வரை தொழில் நுட்பம் நிறைந்த முன்னேறிய நிலையில் இருக்கிறதாகவும் இந்த திட்டத்தின் இணைக்கப்பட்ட அதிகாரிகளின் மற்றும் வீர்ர்களின் மிக முன்னேறிய அறிவு மற்றும் தொழில் திறன் இந்த சான்றிதழ் பெறுவதற்கான காரனம் என்றும் கூறினார்.

அதன் பிரகு உரையாற்றிய கடற்படை தளபதி இந்த திட்டம் ஆரம்பத்தில் இருந்து தற்போது தரமான சான்றிதழ் பெறும் வரை மிகவும் அர்ப்பணிப்புடன் கடமைகளை செய்த அனைத்து கடற்படையினறுக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.மேலும் இந்த திட்டம் மூலம் மிக நன்றாக உற்பத்தி செய்யப்பட்ட கடலோர காவல் படகுகள் பயங்கரவாதம் முடிவின் இறுதி மனிதாபிமான நடவடிக்கையின் பயன்படுத்தப்பட்டது மற்றும் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கத்துக்கு கடற்படைக்கு பெரும் பங்கு குடுத்தது என்று கூறினார்.

அதன் பிரகு ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழ் கடலோர காவல் படகுகள் தயாரிக்கும் திட்டம் குறித்து பணிப்பாளர் நாயகம் பொறியாளருக்கு வழங்கப்பட்டது.இன் நிகழ்வுக்கு இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குணவர்தன அவர்கள், பணிப்பாளர் நாயகம் டி ஜி ஜி தர்மவர்தன அவர்கள் மற்றும் கடற்படை பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட வீர்ர்கள் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் நினைவுகூறி நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.