04 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்திசெய்வதக்கு அப் பகுதிகளின் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுவது அதின் இன்னோறு திட்டமாகும். அதன் படி கெபத்திகொல்லாவ ஈதலவித்தவெவ பண்டைய ஆலயம், ஹொரவுபதான புஹுலேவெவ ரலபனாவ ஸ்ரீ சுஜாதாராம ஆலயம், அனுராதபுரம் கல்நேவ ஒத்தாபஹுவ கிராமம் மற்றும் பொல்பிதிகம சேருகஸ்யாய கிராமங்களின் நிருவப்பட்ட 04 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (01) மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கபபட்டது.

குறித்த இச் செயற்றிட்டத்தின் மூலம் ஈதலவித்தவெவ பண்டைய ஆலயத்தின் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலயத்தின் அப் பகுதியில் வசிக்கின்ற 180 குடும்பங்களுக்கும், புஹுலேவெவ ரலபனாவ ஸ்ரீ சுஜாதாராம ஆலயத்தின் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலயம் மூலம் அப் பகுதியில் வசிக்கின்ற 220 குடும்பங்களுக்கும், கல்நேவ ஒத்தாபஹுவ கிராமத்தின் மற்றும் பொல்பிதிகம சேருகஸ்யாய கிராமங்களின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலயங்கள் மூலம் 610 குடும்பங்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். குறித்த இச் செயற்றிட்டத்திற்கு புத்த சாசன அமைச்சு மற்றும் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதி அனுசரணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செயற்றிட்டம் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. இது வரை 123 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டுள்ளன 54,660 குடும்பங்களுக்கு மற்றும் 45,100ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறு சமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.