111 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது
 

உளவு தகவலின் படி கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் வைத்து 111 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் படி இன்று (11) வட-மத்திய கடற்படை கட்டளை மன்னார் இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் வீர்ர்கள் மற்றும் மன்னார் பொலிஸார் மன்னார் பிரதேசத்தில் வேன் ஒன்றை நிறுத்தி மேற்கொண்ட சோதனையின் போது 110 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், புத்தளம் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் வீரர்கள் பொலிஸார் உதவியுடன் நேற்று (10) அப் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் விநியோகம் செய்து கொண்டிருந்த ஒரு கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கஞ்சா தொகை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மற்றும் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.