தொண்டர் கடற்படையின் புதிய கட்டளை அதிகாரி கடமைகளை ஆரம்பித்தார்
 

இலங்கை தொண்டர் கடற்படையின் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் டப் எம் ஜே. பி விஜேகோன் அவர்கள் இன்று (11) வெலிசறை இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் உள்ள தொண்டர் கடற்படை தலைமையகத்தில் கடமைகளை ஆரம்பித்தார்.

இதுக்கு முன் இங்கே கட்டளை அதிகாரியாக இருந்த கொமடோர் டய்டஸ் கன்னங்கர அவர்கள் 2016 மார்ச் 02 திகதி இருந்து தொண்டர் கடற்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி கடற்படையின் ஓய்வு பெற்ற காரனத்தினால் கேப்டன் விஜேகோன் அவர்கள் புதிய பதவிக்காக நியமிக்கப்பட்டார்.

கேப்டன் டப் எம் ஜே. பி விஜேகோன் அவர்கள் 1989 நவம்பர் 01 திகதி தொண்டர் கடற்படையின் நடிப்பு சப்-லெப்டினன்ட்ராக சேர்ந்து படிப்படியாக தனது பதவி உயர்வுகள் பெற்று 2016 ஜனவரி 01 திகதி கேப்டன் பதவிக்கி உயர்வு பெற்றார். அவரது தொழில் வாழ்க்கையில் தேசிய கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளரான இவர் போலவலான அரசாங்க ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் ஆங்கிலம் ஆசிரிய சான்றிதழ் பெற்றார்.மேலும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பி.ஏ முதல் இளங்கலையும், கொழும்பு, பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரி கல்வி டிப்ளோமாவும், பெற்று அவர் இந்த தகுதிக்கு முன் கடற்படை மற்றும் கடல்சார் கள்லுரியில் இயக்குனர் (கல்வி)யாகவும் பணியாற்றினார்.