இன்னொறு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின்வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் மற்றெமொரு சமூக நலத் திட்டமாகபுத்தல பிரதேச செயலகத்தின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (12)மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

நிறுவப்பட்டுள்ள குறித்த இந் நீர் சுத்திகரிப்பு நிலய மூலம் புத்தல பிரதேச செயலகத்தில் நிருவனத்தின் பணிபுரியும் 77 அலுவலர்கள் மற்றும் அப் பகுதியில் வசிக்கின்ற 450 குடும்பங்கள் ஆகியோர் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.குறித்த இச் செயற்றிட்டத்திற்கு சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதி அனுசரணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தென்கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை கப்பல் மஹானாக நிருவனத்தின் சிவில் பொறியியல் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீர்ர்களுடயை பங்களிப்பில் சுத்திகரிப்பு இயந்த்தைதினை வைப்பதற்கான கட்டிடம் நிருவப்பட்டது.

சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப் பிரதேசங்களில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் தேவயை கருத்திற் கொண்ட கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு அதன் தொழில்நுட்பற் அறிவை பயன்படுத்தி குறித்த இவ் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்  தயாரிக்கப்பட்டன இது வரை 134நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டுள்ளன 58,056 குடும்பங்களுக்கு மற்றும் 45,225 ற்குமேற்பட்டமாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும் எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுபட்ட சமூக சேவைகள் இலங்கை கடற்படையினறால் மேற்கொள்ளப்படவுள்ளன.