கடற்படைத் தளபதி பாகிஸ்தான் இராணுவ பிரதானியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படைத் தளபதி,வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் பாகிஸ்தான் இராணுவ பிரதானி ஜெனரல் கமர் ஜாவிட் பஜா அவர்களை இன்று(16) லாஹுரில் வைத்து சந்தித்தார்.

பாகிஸ்தானில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அமான்-2017  கூட்டுப்பயிற்சி     நிகழ்விற்கு வைஸ் அட்மிரல் விஜேகுணரத்ன அவர்கள் பிரதம அதிதியாக  உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  அத்துடன் பன்னாட்டு கடல்சார் கூட்டுப்பயிற்சி அண்மையில் கராச்சியில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

குறித்த இச் சந்திப்பின்போது பிராந்தியத்தில்  நாடுகடந்த பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதேவேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பாக்கிஸ்தான் இராணுவத்தினரால் தாய் நாட்டிற்க்காக செய்த உயிர்த்தியகம் மற்றும் சாதனைகள் குறித்தும் தனது பாராட்டினை  தெரிவித்துக் கொண்டார். அத்துடன் பராமரித்தல், பிராந்திய உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றிற்கு இலங்கை கடற்படை  அதன் முழு ஆதரவையும் வழங்கும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

மேலும்,அண்மையில்(15) லாஹுரில்  அமைந்துள்ள பாகிஸ்தான் கடற்படை யுத்த கல்லூரியில் கௌரவ அதிதியாகவும் கலந்து  கொண்டார்.