இரனதீவு கிரிஸ்துவர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு கடற்படை ஆதரவு
 

சுமார் 6 மைல் மேற்கு நச்சிகுடாவில் அமைந்துள்ள இரனதீவு செபமாலை எங்கள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா வருடத்தின் முதல் 40 நாட்களின் பிறகு பிறக்கும் முதல் வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படை கப்பல் புவேனேகா கடற்படை வீரர்களின் முழு உதவியுடன் வெற்றிகரமாக 3ம் திகதி மார்ச் மாதம் 2017 ஆம் அண்டு நடத்தப்பட்டது. குறித்த இந் நிகழ்வு சுமார் 700 கிரிஸ்துவர் பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்வு யாழ்ப்பாணமறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு பத்திநாதர் ஜோசப்தாஸ் ஜெபறட்ணம் அடிகளாரால் தலைமைல் நடைப்பெற்றது.

பாவ மன்னிப்பின் பின்னர் சிலுவை நச்சிக்குடாவிலிருந்து இரனதீவிற்கு பக்தர்களினால் சுமந்து கொண்டுவரப்பட்டது.

குறித்த இந்நிகழ்விற்கு தேவையான அனைத்து வசதிகளும் வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படையினரால் வழங்ப்பட்டன. மேலும் இத் தீவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உயிர் காக்கும் குழுவினருடன் இலங்கை கடற்படைபடகுகளும் ஈடுபடுத்தப்பட்டன.

குறித்த இந் நிகழ்வினை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் வகையில் உதவி வழங்கிய இலங்கை கடற்படையினருக்கு குருமுதல்வர் அருட்திரு பத்திநாதர் ஜோசப்தாஸ் ஜெபறட்ணம் அடிகளார் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.