ஹம்பாந்தோட்டையில் கடற்படையினரின் விழிப்பூட்டல் நிகழ்வு
 

பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடல் நீர் சுத்திகரிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான விழிப்பூட்டல் நிகழ்வு ஒன்று நேற்று (மார்ச் .09) ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்நிகழ்வின் மூலம் அவசர சூழ்நிலைகளின்போது கடல் நீரை சுத்திகரித்தல் மற்றும் அதனை விநியோகித்தல் ஆகிய நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை இலங்கை கடற்படையினருக்குடையே பகிர்ந்துகொள்ளும் வகையிலான செயற்பாடுகள் அண்மையில் “போல் ரிவர்” எனும் அமெரிக்க கடற்படை கப்பலில் இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்க கடற்படையினரால் நடாத்தப்பட்டுள்ளது.

இதேவேளை யூஎஸ் கடற்படை அதிகாரிககள் மற்றும் வைத்திய அதிகாரிகளள் இப்பிரதேச மக்களின் நலன் கருதி நடத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை திஸ்ஸமகாராம ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மேலும், இதன்போது கண், பல் மற்றும் வெளிநோயாளர் மருத்து சிகிச்சை என்பவற்றில் 2௦௦ க்கு மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Awareness programme on sea water purification

 

 

 

 

 

 

 

 

 

 

medical clinic