இலங்கை கடற்படை தளபதியின் விஜயத்தின் போது வடக்கில் பல திரந்து வைப்புகள்

கடற்படை தளபதி நேற்று (22) வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அப்போ வடக்கு கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் மூலம் கடற்படைத் தளபதி அன்போடு வரவேற்கப்பட்டன. இன் நிகழ்வுக்காக கடற்படை தலைமையகத்தில் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகள் கலந்துகொன்டனர். இந்த விஜயத்துக்கு இணையாக வடக்கு கட்டளையின் கடற்படையினரால் கட்டி முடிக்கப்பட்ட பல கட்டுமானங்கள் அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் (மார்ச் .11) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தீவு இறங்குதுரை அரச உயர் அதிகாரிகள் சகிதம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள் கோலாகலமாக திறந்துவைத்தார். குறித்த இறங்குதுரை யாழ் மாவட்ட செயலகம் ஊடாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மதம் மத அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியுடன் வட மாகாண கௌரவ ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை கடற்படையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது

மேலும், (2006) கடந்த வருடம் நவம்பர் மாதம் இதற்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இப்புதிய இறங்குதுரை மீன்பிடி இழுவைப் படகுகள், பயணிகள் படகு சவாரி மற்றும் கடல் ஆம்புலன்ஸ் ஆகியனவற்றை பாதுகாப்பாக செயற்படுத்தும் வகையில் 6 அடி தொடக்கம் 8 அடி ஆழம் உடையதாக காணப்படுகின்றது. இத்திட்டத்தின் முதற்கட்டம் 101 அடி நீளம் மற்றும் 31 அகலம் கொண்டு பரந்த இறங்குதுரையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கீரிமலை வீடுத்திட்ட “நல்லிணக்கபுரம்” எனும் பெயரில் சுத்திகரிக்கப்பட்ட தூய குடி நீர் விநியோகிப்பதற்கான சுத்திகரிப்பு நிலையம் கடற்படை தளபதியினால் நேற்று கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது. 60,000 லீட்டார் கொள்ளளவு கொண்ட குறித்த நீர் சுத்திகரிப்பு நிலைய நீர் தங்கியினூடாக நல்லிணக்கபுரத்தின் 50 குடும்பங்கள் தமது நாளாந்த தேவைகளுக்கு ஏற்ப தூய குடி நீரை பெற்றுக்கொள்ளமுடியும். இந்நிகழ்வில் அரச உயர் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், மற்றும் பெருந்தொகையான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

கடற்படை தளபதி நெடுந்தீவில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் வசப நிருவனத்தில் சுற்றுபயணத்தில் ஈடுபடும் போது தையல் மையமத்தில் பனியில் ஈடுபடும் தையல்காரர்கள் 38 பேருக்கு வருடாந்த படியினை வழங்கும் விழாவுக்கு கழந்துகொன்டார்.காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நலத்துறை கடை திறப்பு கடற்படைத் தளபதி மூலம் நடந்தது.

இலங்கை கடற்படை கப்பல் கந்சதேவ நிருவனத்தில் புதிய இறங்குதுரை திறப்பு கடற்படைத் தளபதி மூலம் நடந்தது. 140 அடி நீளமான, ½ 6 அடி அகலமான, 10 அடி உயரமான குறித்த இறங்குதுரை கடற்படையினரால் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

Opening of Delft Jetty

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Opening of “Nallinakkapuram” purified water distribution project

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Visit at Naval Sewing Centre at SLNS Wasaba

 

 

 

 

 

Opening of Naval Welfare Shop at SLNS Uththara

 

 

 

 

 

 

 

 

 

 

Opening of Base Pier at SLNS Kanchadewa