பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை
 

“பீஎன்எஸ் சைப்” மற்றும் “பீஎன்எஸ் நஸ்ர்” ஆகிய இரு பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (மார்ச் .12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த இக்கப்பள்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்

மேலும், இம்மாதம் 15ம் திகதி வரை தரித்திருக்கவுள்ள இக்கப்பல்களின் சிப்பந்திகள் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.