பேரழிவு நிர்வகித்தல் பற்றி பயிற்சி பட்டறை அம்பாந்தோட்டையில்
 

பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பேரழிவு நிர்வகித்தல் பற்றி பயிற்சி பட்டறை இன்று (மார்ச் .13) அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

கொடி அதிகாரி கடற்படை நீர் கட்டளை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள குறித்த திட்டத்தில் சுனாமிகள், வெள்ளம், வறட்சி உட்பட இயற்கை பேரழிவுகளின் போது காப்பாதுவது எப்படி என்று கூறப்பட்டுள்ளது. இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையினறும் இத்தகைய பேரழிவுகளில் தரை மற்றும் விமானத்தில் நிவாரண திட்ட நடவடிக்கைகள் விரிவாக சமர்ப்பித்தால்கள்.மேலும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அதிகாரிகளால் சுனாமி அவசர சூழ்நிலைகளில் சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் மூலம் மக்கள் தயாராகுவது பற்றி தகவல் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நிறுவப்பட்ட இலங்கை கடற்பயைின் மரைன் படை பற்றியும் அங்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுக்குக்காக தெற்குக் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கொடி அதிகாரி கடற்படை நிர் கட்டளையாக பனியில் ஈடுபடும் ரியர் அட்மிரல் கபில சமரவீர முப்படை மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்புப் படைகளின் மூத்த அதிகாரிகள் ஆகியவர்கள் உடனிருந்தனர். இன் நிகழ்வின் போது நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.