சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட-மத்திய கடற்படை கட்டளைக்கு இனக்கப்பட்ட கடற்படை வீரர்களால் வெடி வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் இரன்டு இடங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதன் படி மன்னார் இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்கள் நேற்று (13) சவுத்பார் பிரதேச கடலில் வைத்து டைனமைட் பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 04 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு ரோந்துப் படகு, 2 ஜிபிஎஸ் இயந்திரங்கள், ஒரு சுழியோடி முகமூடி, 02 சோடி சுழியோடி காலணிகள், 225 மீட்டர் நீளமான வலை மற்றும் பிடிக்கப்பட்ட 766 கிலோ மீன்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும்பொறுட்கள் ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனத்தில் விரர்களால் இன்று(14) வெடிதலதீவு பிரதேச கடலில் ஜெலட்நைட் பயந்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய இரன்டு ரோந்துப் படகுகள், 2 ஜிபிஎஸ் இயந்திரங்கள், 09 சுழியோடிமுகமூடிகள் 08 சோடி சுழியோடி காலணிகள், 9 மீன்பிடி வலைகள், பிடிக்கப்பட்ட 2475 கிலோ மீன்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.