மேலும் 13 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு திரந்து வைப்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடய கருத்துக்கு கீழ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு மூலம் தயாரிக்கப்பட்ட 13 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மாத்தலை வில்கமுவ பகுதியில் நிறுவப்பட்டதுடன் குறித்த இயந்திரங்கள் நேற்று(13) திகதி மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்களால் சடங்காச்சார முறைப்படி திறக்கப்பட்டது.இன் நிகழ்வுக்காக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கலந்து கொண்டார்.

அதிமெதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரடைய வழிகாட்டுதலின் கீழ் மாத்தலை வில்கமுவ பகுதி உள்ளடக்கி நடத்தப்பட்ட உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இணை நிகழ்வாக குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டன. அதன் படி சிறுநீரக தடுத்தல் மீது ஜனாதிபதி செயலணியின் நிதி உதவியின் கீழ் 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும், காலி முகத் ஹோட்டலில் ISN கார்டினர் சிறுநீரக நோய் தடுப்பு நிதியின் கீழ் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் .மிக குறுகிய காலத்திற்குள் நிறுவுவதற்கு கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுக்கு முடிந்துள்ளது. டற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அறிவு பிரதிபலித்து10 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஆன்லைன் மூலம் திறக்கப்பட்டது

அதன் படி சிறுநீரக தடுத்தல் மீது ஜனாதிபதி செயலணியின் நிதி உதவியின் கீழ் மாத்தளை மாவட்டத்தில் நாமினிஒய மத்திய கல்லூரி,மாரக மஹா வித்தியாலயம்,நுககொல்ல மஹா வித்தியாலயம், மஹவதென்ன முதன்மை கல்லுரி, ரன்துன்னவெவ முதன்மை கல்லுரிசோனுத்தர இளநிலை கல்லூரி,மல்கம்மன இளநிலை கல்லூரி போகஹவெவ இளநிலை கல்லூரி,தர்மபால இளநிலை கல்லூரி,வில்கமுவ இளநிலை கல்லூரி ஆகிய பாடசாலை கலுக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டு குறித்த பாடசாலைகளில் 3622 மானவர்கள் மற்றும் அப் பகுதியில் வசிக்கின்ற 6006 குடும்பங்கள் சுத்தமானகுடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.மேலும் ISN Gardiner சிறுநீரக நோய் தடுப்பு நிதியின் கீழ் மாத்தலை பேரகனத்த,கெம்புருஒய மற்றும் லேடியன்கல பகுதிகளில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் அப் பகுதியில் வசிக்கின்ற 546 குடும்பங்கள் சுத்தமானகுடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

இச் செயற்றிட்டம் கடற்படை ஆராய்ச்சி மற்றும்அபிவிருத்தி பிரிவின் அறிவுமற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. இது வரை 153 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டுள்ளன 73,200 குடும்பங்களுக்கு மற்றும் 56,700 ற்குமேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும்.எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.