வழங்கல் மாநாடு 2017 - திருகோணமலையில் இரண்டாவது முறையாக நடைபெறும்
 

மூன்றாவது நீண்ட சரக்கியல் மேலாண்மை மாணவ அதிகாரிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழங்கல் மாநாடு 2017 தொடர்ந்து இரண்டாவது தடவயாக இம் மாதம் 24ம் திகதி திருகோணமலை கடற்படை கடல்சார் அகாடமியில் நடைபெற உள்ளன. இந்த மாநாட்டில் கடல் வழங்கல் மையமாக கொண்ட மூலோபாய உறவுகள் வலுப்படுத்தல் என்ற கருப்பொருளாகும்.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கழந்துகொள்ள உள்ளார் குறித்த மாநாட்டில் தலைமையுரை மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் வழங்கல் மேலாண்மைத் துறையின் பேராசிரியர் அமல் எஸ் குமாரகே அவரால் நடத்தப்பட உள்ளன.

இலங்கை வழங்கல் பிரிவின் தொழில் நெறிஞர்கள், அறிஞர்கள், வெளிநாட்டு கடற்படையினர்கள், இராணுவம், விமானப்படை உறுப்பினர்கள், தேசிய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் பிரதிநிதிகள், பல அரசாங்க முகவர் மற்றும் பொது நிறுவனங்கள் உட்பட பல்வேறு ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க உள்ளன.