இலங்கை கடல் எல்லை மீறிய இந்திய மீனவர்கள் 16 பேர் கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 16 பேர் நேற்று (22) இரண்டு இடங்களில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் பிரகாசம் கடலோரப் பாதுகாப்பு படையின் உதவியுடன் வடக்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினரால் அனலதீவுக்கு வடமேக்கு பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் மற்றும் ஒரு டோலர் படகு கைதுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள், அத்துடன் அவர்கள் பயன்படுத்திய பொறுட்கள் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் வடமத்திய கடற்படை கட்டளையின் இனக்கப்பட்ட இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளின் வீரர்களால் மன்னாரின் வட கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் மற்றும் ஒரு டோலர் படகு கைதுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள், அத்துடன் அவர்கள் பயன்படுத்திய பொறுட்கள் இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.