வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பிறகு சயுர கப்பல் இலங்கை வந்தடையும்
 

மலேஷியாவின் நடைபெற்ற லிமா 2017 சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் கடல் சார்ந்த கண்காட்சிக்கு கலந்துகொள்ள கடந்த 14ம் திகதி இலங்கையின் புறப்பட்ட கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுர வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பிறகு இன்று(31) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையுந்தது. குறித்த கப்பல் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளது

அதன் பிரகு கப்பலின் கட்டளை அதிகாரி கொமடோர் பிரசந்ன அமரதாச மேற்கு கடற்படை பிரிவின் தளபதி ரியர் எட்மிரல் நிராஜ அட்டிகள ஆகியோருக்கிடையே சுற்றுப்பயணத்தின் நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் பற்றி கலந்துரையாடல் இடம் பெற்றன.

சயுர கப்பல் கலந்த இந்த பயிற்சிக்காக மலேசிய அரசக் கடற்படையின் கப்பல்கள் மற்றும் மேலும் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, பாக்கிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா, வியட்நாம் மற்றும் இந்தியா ஆகியவை நாடுகளின் கப்பல்கள் கலந்துகொன்டன. 04 கட்டத்திற்கு கீழ் நடைபெற்ற இந்த பயிற்சியின் மூலம் புதிய அறிவு மற்றும் பல அனுபவங்கள் இலங்கை கடற்படை பெற்றுள்ளது.