கடற்படையினர் ஒருவரை 4.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம்  4.2  கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை மன்னார் தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இன்று (01)  வட மத்திய கடற்படை வீர்ர்களால் மன்னார் போலீஸ் மருந்து பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யபட்ட குறித்த நபர் மற்றும் கேரள கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மன்னார் போலீஸ் மருந்து பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் கடந்த மார்ச் 28ம் திகதி ஆனமடுவ நவகத்தேகம பகுதியில் வைத்து 05 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 04 பேர் கடற்படை வீர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.