03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்து. மேலும், மக்களுக்குசுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த பகுதிகளில் நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுகின்றன.

அதன் மற்றுமொரு திட்டமாக. தலாவ பஹல சியம்பலாவ மற்றும் மெதிரிகிரிய வெதெஹபுர கிராமங்ளில் நிர்மாணிக்கப்பட்ட 02 நீர்சுத்திகரிப் இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கும் ஒரு  நீர்சுத்திகரிப்பு இயந்திரம் கடற்படை மேரைன் வீர்ர்களின் நன்மைகாக கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் திறந்துவைக்கபபட்டன.

குறித்த இச் செயற்றிட்டத்தின் மூலம் தலாவ பஹல சியம்பலாவ கிராமத்தில் வசிக்கின்ற 345 குடும்பங்கள் மற்றும் வெதெஹபுர கிராமத்தில் வசிக்கின்ற 268 குடும்பங்கள் சுத்தமானகுடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். குறித்த இச் செயற்றிட்டத்திற்குசிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதி அனுசரணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதெ போன்ற கடற்படை மேரைன் வீர்ர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட நீர்சுத்திகரிப் இயந்திரம் மூலம் 164 கடற்படை உறுபினர்கள் சுத்தமானகுடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர் 

இது வரை 179 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில்நிருவப்பட்டுள்ளன 82,389 குடும்பங்களுக்கு மற்றும் 64,581ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும்இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.