பாதிக்கப்பட்ட மீன்பிடி படகு காப்பாற்ற இந்திய கடலோரக் காவல்படையின் ஆதரவு
 

திருகோணமலை மின்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க பயனித்த இவின்டி 01 நெடுநாள் படகில் ஏட்பட்ட தொழில்நுட்ப தோல்வி காரணமாக இந்திய கடல் பகுதிக்கு அடித்து செல்லப்பட்ட போது 05 மீனவர்கள் மற்றும் குறித்த படகு இந்திய கடலோரக் காவல் படையினறால் காப்பாற்றபட்டுள்ளது.

அதன் படி இந்திய கடலோரக் காவல்படையின் “அபிக்” கப்பல் மூலம் விபத்தான படகில் மீனவர்கள் காங்கேசன்துறை இருந்து சுமார் 15 கடல் மைல்கள் தூரத்தில் சர்வதேச கடல் பகுதியில் வைத்து இன்று (5) இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்கிரமவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் பதிப்புரிமை அறிவிப்பின் படி சென்னை கடல் மீட்பு மையம் மற்றும் இந்திய கடலோரக் காவல்படை மூலம் மிக விரைவில் மீற்க முடிந்துள்ளது.

இந்திய கடலோரக் காவல்படையின் கண்காணிப்பு படகுகள் உபயோகித்து இப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது கடலில் மிதக்கும் மீன்பிடி படகு மற்றும் மீனவர்கள் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

குறித்த நெடுநாள் படகு திருகோணமலை மின்பிடி துறைமுக விட்டு கடந்த மார்ச் 24 ம் திகதி மீன்பிடிக்க பயனித்துள்ளது.ஏப்பிரல் 01 திகதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளன. குறித்த படகு காங்கேசன்துறைதுறைமுகத்திற்கு கொன்டுவந்த பின் உரிமையாளருக்கு ஒப்படைக்கப்படும்.