மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்த இரு படகுகளில் ஏற்பட்ட தீ அனைவதுக்கு கடலோரக் காவல்படையின் ஆதரவு
 

நேற்று (14) மிரிஸ்ஸ துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்த Ceylon Speed Liner தனியார் நிறுவனத்தின் டீப் ப்லு மற்றும் ச்பீட் லயின் திமிங்கிலம் பார்க்கும் படகுகளில் ஏற்பட்ட தீ அனக்கும் நடவடிக்கைகாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மாத்தறை மாநகர சபை இனந்து ஆதரவு வழங்கியது.

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் சிஜி 12' கப்பல் மற்றும் கடலோரக் காவல்படை ரோஹன நிருவனத்தின் அவசர கால அணி தீ ஏற்பட்ட இடத்துக்கு முதலாக வந்தடைந்து. தந்திரோபாயங்கள் மற்றும் தீயை அணைக்கும் உபகரணங்கள் பயன்படுத்தி தீ அனக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இதே வேலையில் மாத்தறை மாநகர சபையின் தீ சண்டை பணியாளர்களும் குறித்த இடத்துக்கு வந்தடைந்து தீயை அணைக்கும் பணிகளின் இடுபட்டனர். தீ பரவலும் அடக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டு நடவடிக்கையில் கடலோரக் காவல்படையின் 'சிஜி 12' படகு மூலம் அப் பகுதியில் இருந்த அனைத்து நாளங்கள் பாதுகாப்பாக வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டன. அது மூலம் மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்த திமிங்கலம் பார்க்கும் படகுகள் மற்றும் பிற கப்பல்கள் பெருமளவு தீயில் இருநடது பாதுகாக்க முடிந்தது.