சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்குக் கடற்படை கட்டளையின் கடற்படைவீர்ர்களால் நேற்று (16) புல்மொட்டை கொடுவகட்டுமலே பகுதி கடலில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய 03 ரோந்துப் படகு, தடை செய்யப்பட்ட ஒரு வலை மற்றும் பிடிக்கப்பட்ட 350 கிலோகிராம் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக குச்சவேலி போலீஸ் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.