ஆபத்தான நிலையில் இருந்த நோயாளி சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை உதவி
 

கடந்த 06ஆம் திகதி மீன் பிடித்ததற்காக பேருவளை மீன்பிடி துறைமுகத்தை விட்டு கடலுக்கு சென்ற கெகரி 01” மீன்பிடி படகில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை அவசர சிகிச்சைக்காக கரைசேர்க்க இன்று (20) கடற்படையினர் உதவியளித்தது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அறிவித்தலின் படி உடனடியாகக், தெற்குக் கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் பீ 414 வேக தாக்குதல் படகில் கடலுக்கு சென்றார்கள். காலி கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 42 கடல் மைல்கள் தூரத்தில் இருந்து காலி துறைமுகத்திற்கு நோயாளி கொண்டுவந்து முதலுதவி அளிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.