புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை சங்கத்தின் செயலக அலுவலகம் திறக்கப்படும்
 

வேலிசறை கடற்படை முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கை கடற்படை சங்கத்தின் செயலக அலுவலகம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது. 04 மாடிக்காக திட்டமிடப்பட்டுள்ள குறித்த கட்டிடத்தில் முதல் மாடியில் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

கடற்படை சங்க அலுவலகத்துக்கு நிரந்தர அலுவலக தொகுதியின் தேவை நீண்ட காலமாக இருந்துள்ளது.கடந்த ஆண்டில் (2016) ஆகஸ்ட் மாதம் 4 திகதி குறித்த கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடற்படை சங்கத்தின் நிதி பங்களிப்பின் கடற்படை பொறியாளர் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீர்ர்களின் முழு பங்களிப்புடன் நவீன வசதிகளையும் கொண்டு கட்டிடத்தின் கட்டுமான பனிகள் நடைபெருகின்றது.

குறித்த செயலக அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வுக்கு மதிப்பிற்குரிய சங்கத்தினர், கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்ஹ கடற்படை பணிப்பபாளர் நாயகங்கள், ஓய்வு பெற்ற இராணுவத்தினர் சங்கத்தின் தலைவர் (ஓய்வு) கேஏ ஞானவீர கடற்படை சங்கத்தின் தலைவர் (ஓய்வு) டீஏ விஜேகுனவரடதன ஆகியவர்கள் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்துக்கொண்டனர். .இன் நிகழ்வு நினவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இங்கு கடற்படை தளபதியால் ஒரு மரக்கன்று நாட்டப்பட்டுள்ளது.