மெரைன்ஸ் உணவகம் கடற்படை தளபதி கையால் திறக்கப்படும்
 

நுவரெலியா கிரிகோரி ஏரி பகுதியின் அமைந்துள்ள கடற்படை மூத்த அதிகாரி ஓய்வு விடுதி அருகில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மெரைன்ஸ் உணவகம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த உணவகத்தில் உணவகம் வசதிகள், பூல் வசதிகள் உட்பட நவீன உணவு உண்ணும் அனுபவம்கள் பெற வாய்ப்பு உள்ளன. கடற்படை பொறியாளர், மின் மற்றும் மின்னணு பொறியியல் பிரிவுகளில் அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் கடந்த ஆன்டில் (2016) நவம்பர் 3ம் திகதி இந்த உணவகத்தில் கட்டுமான நடவடிக்கைகள் தொடங்கி மிகக் குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான அளவில் நிறைவு செய்யபட்டுள்ளது.

இன் நிகழ்வுக்கு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி யமுனா விஜேகுனரத்ன, கடற்படை பணிப்பபாளர் நாயகங்கள் உட்பட மேற்குக் கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துக்கொன்டனர்.