காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை உதவி
 

பலநாள் மீன்பிடிக்காக கடந்த 28ம் திகதி மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகம் விட்டு சென்றிருந்த ரனசூர 05 படகின் மீனவர் ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான சுகயீனம் காரணாமாக அவரை மருத்துவ உதவிகளுக்காக கரைக்கு கொண்டுவருவதற்கு கடற்படை உதவியளித்துள்ளது.

இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரிடம் அறிவித்தலின் தென்பிராந்திய கட்டளையாகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைவாக விரைந்து செயற்பட்ட கடற்படையினர், குறித்த மீனவரை அதிவிரைவு தாக்குதல் படகின் (பீ 432) மூலம் கரைக்கு கொண்டுவந்தனர்..

காலி கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 62 கடல் மைல்கள் தூரத்தில் இருந்து காலி துறைமுகத்திற்கு நோயாளி கொண்டுவந்து முதலுதவி அளிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.