சட்டவிரோத கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்க கடற்படை உதவி
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி தென் கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்கள் சாச்த்ரவேலி பொலிஸ் அதிரடிப்படையின் அதிகாரிகளுடன் இனந்து நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது லாஹுகல காட்டின் சுமார் ஒரு ஏக்கர் சட்டவிரோத கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.குறித்த கஞ்சா தோட்டம் லாஹுகல காட்டின் நீலகிரி ஆலயத்தில் இருந்து 15 கிலோ மிட்டர் தூரத்தில் உள்ளது.

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்களால் மற்றும் சாச்த்ரவேலி பொலிஸ் அதிரடிப்படையின் அதிகாரிகளால் குறித்த தோட்டத்தில் நன்றாக வளர்ந்த சுமார் 5000 த்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் நெருப்பு வைத்து எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன் மேலதிக சட்ட நடவடிக்கைகள் பொத்துவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றது.