தலசீமியா மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவுக்கு அடிக்கள் நாட்டுவது மற்றும் தலசீமியா ஊசி இயந்திரங்கள் விநியோகம் சுகாதார அமைச்சர் தலமயில் கண்டியில்
 

தலசீமியா மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவுக்காக அடிக்கள் நாட்டுவது மற்றும் தலசீமியா ஊசி இயந்திரங்கள் விநியோக திட்டம் இன்று (08) சுதேச மருத்துவத்துறை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அமைச்சர் கெளரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவருடைய தளமையில் கண்டி போதனா வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.குறித்த நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் கழ்துகொன்டார்.

இன்று தினத்துக்கு ஈடுபட்டுருக்கும் உலக தலசீமியா தினத்துக்கு இனையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் ஆரு மாடிகள் கொன்ட கட்டிடத்திற்கு அடிக்கள் நாட்டப்பட்டது.மேலும் இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட தலசீமியா ஊசி இயந்திரங்கள் குறித்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பெற்றுக்கொடுவதுக்காக கடற்படைத் தளபதி அவர்களால்  கெளரவ அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்பொலுது இலங்கை முலுவதும் சுமார் 3500 தலசீமியா நோயாலிகள் இருக்கிறார்கள் கடற்படையினருடன் எதிர்காலத்தில் அவர்கள் எல்லோருக்கும் தலசீமியா ஊசி இயந்திரங்கள் வழங்குவோம் என்று கெளரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் கூறினார்.இது வரை 1521 இயந்திரங்கள் நோயாலிகலுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தலசீமியா நோய் காரனித்தால் இரத்தத்தில் உள்ள இரும்பு உடலில் கூடியிருக்கும். மீண்டும் மீண்டும் இரத்தம் பெரும்பொது இந்த நிலைமை மேலும் வளர்ச்சியாகும். தலசீமியா நோயாலிகளின் உடலில் இரும்பு நீக்குவதற்கு தலசீமியா ஊசி இயந்திரம் தேவைபடும். கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு மிகவும் குறைந்த செலவில் குறித்த தலசீமியா ஊசி இயந்திரங்கள் முதல் முரையாக 2010 ஆன்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அனுமதியும் பெற்ற குறித்த ஊசி குத்திய இயந்திரம் 2012 ஆன்டில் இலங்கை பொறியியல் நிறுவனத்தினால் இலங்கையின்  சிறந்த தயாரிப்பாலர்க்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

கடற்படைத் தளபதியின் நேரடி மேற்பார்வையில் கீழ் மேற்கொள்ளப் படுகின்ற தலசீமியா ஊசி இயந்திரங்கள் தற்பொலுது அரசாங்க மருத்துவமனைகளில் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் நாயாலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த தேவைக்காக குறித்த இயன்திரங்கள் எதிர்காலத்திலும் தயாரிக்க கடற்படையினர் தயாராக உள்ளன.  

குறித்த நிகழ்வுக்காக கண்டி போதனா மருத்துவமனையில் இயக்குனர், மருத்துவ ஊழியர்கள், வி.ஐ.பி நபர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.