வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை உறுபினர்கள் இரத்த தானத்தில் ஈடுபட்டனர்
 

இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக சேவைகளின் மற்றொரு திட்டமாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை உறுபினர்கள் நேற்று(09) யாழ்.போதனா வைத்தியசால இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்த தான முகாமில் கலந்து கொண்டனர்.    

வட மாகாண ஆளுனர் செயலக அலுவலகத்தில் அதிகாரிகளால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த இரத்த தான முகாம் இந்த ஆண்டு (2017) நடத்தப்படுகின்ற வீரர்கள் பன்டகைக்கு இனையாக நடைபெற்றது. இதுக்காக வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவருடைய வழிகாட்டுதலின் கீழ் வட கடற்படை கட்டளையின் கடற்படை உறுபினர்கள் தன்னார்வ விருப்பத்தின் இதுக்காக பங்களித்தார்கள்.

மேலும் மற்றொரு இரத்த தான முகாம் யாழ் புந்குடுதீவில் நடைபெற்றது.மே மாதம் 02 திகதிக்கி ஈடுபட்ட புன்குடுதீவு இலங்கை கடற்படை கப்பல் கோடைம்பர நிருவனத்தின் 18வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குறித்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலயில் வட மாகாண இரத்தம் ஏற்றும் சேவை மையம் பிரிவின் மருத்துவக் குலு குறித்த பணிக்காக உதவியளித்தது. இதுக்காகவும் கடற்படை உறுபினர்கள் தன்னார்வ விருப்பத்தின் பங்களித்தார்கள்.குறித்த முகாம்களில் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள இரத்தம் வட மாகானத்தில் உடல்நலக்குறைவு நிலயில் இரத்த தேவையான அனைவருக்கும் வழங்கப்படும்.