சட்டவிரோத மீன்பிடிப்பதில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்களுக்கு விடுதலை
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 03 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (11) இலங்கை கடற்படையின் உதவியின் நடைபெற்றுள்ளது.

அப் பணி காங்கேசன்துறையின் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் நடத்தப்பட்டது. அதற்காக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் சிஜி 41 கப்பலும் இந்திய கடலோர காவல்படையின் 'ரானி துர்காவதி' கப்பலும் கலந்து கொண்டது. கடந்த 04ம் திகதி இலங்கை கடற்படை மூலம் கைதுசெய்யப்பட்டுள்ள 38 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு ஒப்படைக்கபட்டுள்ளது.